மருதூரில் உதித்த மாசற்ற மாணிக்கம்
இருள்நீக்கி இன்பம் தர இம்மண்ணில்
அருள்பழுத்து நடமாடிய மனிததெய்வம்
கள் தந்த இன்பத்தை தமிழில்தந்த
வெள்ளுடைத் துறவியின் வெல்லத் தமிழை
வெல்லும் புலவர் உலகினில் உண்டோ
பசித்த மனிதவயிறுகள்
பரிதவித்து அலைந்த வேளை
பரிவுகொண்டே அந்தநாளில்
ஜீவகாருண்ய வாய்க்கானல்
வெட்டி இறைமையை தரிசித்தவர்
பித்தேறி நின்றிருந்த மனிதரிடம்
சுத்தஅறிவே தெய்வம் எனக் காட்டி
வித்தாக சமரசத்தை நெஞ்சில் பதித்த
சுத்த சன்மார்க்க ஞானி இவர்
இரக்கம் என்னைவிட்டுப் பிரிந்தால்
என்னுயிர் என்னைவிட்டுப் பிரியும்
என்று உலகில் முதன்முதல்
உரக்கச் சொன்ன உத்தமத் துறவி
அருட்பாத் தென்றலை அவனியில்
வீசிய புரட்சிப் புயல்
சங்கம் சாலை சபை என
சாதனை பலகண்ட சாதனையாளர்
அகிலஉலக சகோதரத்துவம் மற்றும
ஆன்மநேய ஒருமைப்பாட்டை
அன்றே முழக்கிய சமுதாய சிற்பி
சி்த்த மருத்துவர் சித்தர்
சிந்தனையாளர் சீர்திருத்தவாதி
சாதிகளை சமயங்களை தவிர்த்து
ஆன்மாவில் இறைமை கண்ட
அருளாளர்களுக்கெல்லாம் அருளாளர்
வள்ளலாரை நெஞ்சில் நிறுத்துவோம்
உயிர்குலம் நேசிப்போம் ஒருமையில்
உலகம் ஓங்க தவமிருப்போம் ்்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
புதிதாய் வலைப்பூ ஆரம்பித்துள்ள மக்கள் மருத்துவர், வள்ளலார் நேசன், எங்கள் அன்புக்கினியவர் டாக்டர். ஜெய.ராஜமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தன் வலைப்பூ வழியே தாங்கள் தங்களின் ஆன்மீக பணிகள், இலக்கிய பணிகள், வெகுஜன ஊடகமான திரைத்துறை பற்றிய மதிப்பீடுகள், மருத்துவப்பணிகள், அரசியல் ஆர்வமிக்க தன் சொந்த கருத்துகள், தன்னையும் தன் நற்சூழலினான சுற்றம் பற்றிய கருத்துகள், பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவிலான குடும்ப நிகழ்வுகள், நண்பர்களை பற்றிய நிகழ்வுகள், மேலும் பால்யகால நினைவுகள், வள்ளலார் மன்ற நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றையும் இந்த வலைப்பூ வழியே எழுத்துகளாகவும், தொடர் காணொளிகள் வழியாகவும், காதொலிகள் வழியாகவும், புகைப்படங்கள் வழியாகவும் பகிர்வீர்கள் என நம்புகின்றோம்.
ReplyDeleteஇந்த " கருத்து பகிர்தல்" என்பது உங்களுக்கான ஆத்மதிருப்தி என்பது சுயநலம் என்னும் கருத்தாக இருக்குமெனினும், ஆனால் அதே நேரம் இந்த பகிர்வுகள் பலரை "நல்வழிப்படுத்தும்" என்பது பொதுநலம். பொதுநலம் கலந்த சுயநலம் பற்றிய ஒரு நற்செய்தியினை கலைஞர் தன் பராசக்தி திரைப்படத்தின் வழியே அழகாய் விளக்கி இருப்பது இப்போது நினைவில் வருகின்றது. ஆகாரத்துக்காக தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன் என்னும் உதாரணத்தை கையாண்டிருப்பார். அதே போலத்தான் உங்களின் ஆத்மதிருப்தி என்பது மற்றவர்களுக்கான நல்வழிப்பாதையாக அமையட்டும் என மீண்டும் வாழ்த்துகின்றேன்.
தங்களுக்கான ஒரு தின இதழாய், ஒரு வாரப்பத்திரிக்கையாய், ஒரு மாத இதழாய்.... இந்த மின் சஞ்சிகை உங்களுக்கான வரலாற்றுக் கல்வெட்டாய் அமையும். காலா காலத்திற்கும் தங்களது இந்த வரலாற்றுக் கல்வெட்டு படிப்பவர் அனைவருக்கும் மிக்க பலன்களை தர வாழ்த்துக்கள்.
ReplyDelete