பொதிகைத் தென்றலென பூந்தமி்ழ் முழக்குபவர்
பொங்குகின்ற செம்மொழியில் பொய்மை பொசுக்குபவர்
இளவயது முதலே இனமான உணர்வை என்றென்றும்
களம்கண்ட இடமெல்லாம் கண்ணியமாய் வளர்க்கின்ற
சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளியாம்
பயமறியா அய்யா பெரியாரின் வழித்தோன்றல்
கண்ணாக திராவிடத்தை மண்ணில் போற்றிய
அண்ணாவின் அடியொற்றி நடக்கின்ற அரிமா
கலைஞர் என்னும் கன்னல் தமிழ்த்தலைவன்
கரம்பற்றி நடக்கின்ற கழகத்தின் உயிர்மூச்சாம்
இனமானப் பேராசியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன்
டாக்டர். ஜெய.இராஜமூர்த்தி
திருவெண்காடு.
No comments:
Post a Comment