.

.

Thursday, December 11, 2014

பகவத்கீதை தேசிய நூலா? - ஒரு பார்வை!



பகவத் கீதையை அனைத்து இந்திய மக்களும் ஏற்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். இங்கு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையில் இஸ்லாமிய சகோதரர்கள் திருக்குரானைத் தங்கள் வேதமாகவும்கிறித்துவ சகோதரர்கள் பைபிளைத் தங்கள் வேதப் புத்தகமாகவும் கொண்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.


உலகின் ஆன்மிக விடிவெள்ளி சனாதன சடங்குகளுக்கு சாவுமணி அடித்திட்ட சீர்திருத்தச் சிந்தனையாளர் புரட்சி சூரியன் தன்னையறிந்த ஞானி புத்தனைப் போற்றுவோரும் பகவத் கீதையை ஏற்பதற்கு தயாராக இல்லை

தீர்த்தங்கரர்களில் ஒருவரான மகாவீரரின் வழிநடக்கும் ஜைன மதத்தாரும் ஏற்கவில்லை.சீக்கிய அன்பர்களுக்கு குருநானக் சொன்னதுதான் வேதமே ஒழிய பகவத்கீதை ஒருநாளும் வேதமாகாது.



இவர்களையெல்லாம் கழித்துப் பார்த்தால் வரும் கடவுள் மறுப்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவர் அவர்களும் திருக்குறளைத் தவிர எதையும் ஏற்க மாட்டார்கள்!



சரி இந்துமதம் என்பதை ஒரு மதமாகக் கொண்டாலும் இதில் முக்கிய பங்கு வகிக்கும் சைவசித்தாந்திகளின் கொள்கைகளின் படி கடவுள் அவதாரம் ஏற்புடையதல்ல என்கிறபோது கிருஷ்ணனே அடிபட்டுப் போகிறார்.



மத்வரின் துவைதமும் ஆதிசங்கரரின் அத்வைதமும் ராமானுஜரின் வசிஷ்டாத்வைதத்திலிருந்து மாறுபடுகிறபோது வசிஷ்டாத்வைதத்தை மட்டும் அடிப்படையாக் கொண்டு நிற்கும் பகவத்கீதையை இந்தியாவின் தேசிய நூல் என்பதை என்போன்ற தமிழ்ப் பற்றாளர்களும் ஏற்பதற்கு இல்லை!



ஆகவே மோடி இந்த வீண் முயற்சியைக் கைவிட்டு நாட்டுநலனில் அக்கறை காட்டுவது நல்லது தனிமனித நம்பிக்கை மனிதனுக்கு மனிதன் மாறுபடும்!


தேசநலன் அனைவருக்கும் உள்ள ஒன்று என்பதை மனதில் கொண்டு நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டும்!

1 comment:

  1. திருக்குறளே நம் தேசிய நூல், திருவருட்பாவே நம் உலக நூல்.

    அருட்பெருஞ்ஜோதி அடிமை
    தி.ம.இராமலிங்கம் - கடலூர்.

    ReplyDelete