.

.

Thursday, December 18, 2014

தாலிபான்கள் என்னும் கூலிப்பான்கள்!


பள்ளிக்குழந்தைகள் படுகொலை

பாகிஸ்தான் பெஷாவரில் பயங்கரவாதம்

உலகஉருண்டையில் உண்டானது பக்கவாதம்


தாலிபான்கள் என்னும் மதக் கூலிப்பான்கள்

காலிப்பயல்களில் கயவாளித்தனத்தால்


கூனிக்குறுகிப் போனதடா மனிதத்தன்மை


கலியுக ரத்தக் காட்டேரிகளின்

கண்மூடித்தனமான ஈனச் செயலால்


பலியாகிப் போனதடா பள்ளி மழலைகள்


பட்டாம் பூச்சிகளின் பால்வடியும் முகங்களை

முட்டாள்கள் தோய்த்திட்டனர் ரத்தசகதியில்


ஈரம் துளிர்த்த இளரோஜா மொட்டுக்களை

ஈவிரக்கமின்றி சிதைத்து மகிழ்ந்த ஈனப்பிறவிகள்


அல்லாவின் அளவற்ற அருளை அங்கே சில

குல்லா போட்ட மனிதர்களே குண்டால் தகர்த்தனர்


அல்லாவின் நிகரற்ற அன்பை அவமானச் செயலால்

செல்லாமல் போகச் செய்தனர் சிறுமனம் படைத்தோர்


மதங்கள் மனிதம் காக்கும் கேடயமா இல்லை

மனிதஇனத்தை வேரறுக்க வந்த கோடரியா


மதங்கள் புனிதர்கள் தந்துசென்ற படிப்பினையா இல்லை

மானுடத்தை சாய்க்கவந்த பேய்க்கூட்ட ஆயுதமா ்்


யுத்தவெறியில் தசைகளின் வெடிப்புச் சிதறல்களை

பித்தம் தலைக்கேறி ரசிப்போன் மனச்சிதைவு நோயாளி :-(



குழந்தைகள் உடல் அடக்கம் :-(
பெஷாவர் மருத்துவமனையில் சோகம் ...
உயிருக்கு போராடும் மாணவனை தூக்கி செல்லும் ராணுவம்


காப்பாற்றும் ராணுவம்
எல்லை கடந்த மௌனாஞ்சலி - இந்தியாவில்
மேலே கண்ட இந்த ஆறு தாலிபான் தீவிரவாதிகள் தான் இந்த பிஞ்சுகளை கருக்கியவர்கள் என தாலிபான் இயக்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அடச்சீ..... கொடுமையான நரகம் கிட்டட்டும் இந்த பாவிகளுக்கு!

1 comment:

  1. ஈரம் துளிர்த்த இளரோஜா மொட்டுக்களை

    ஈவிரக்கமின்றி சிதைத்து மகிழ்ந்த ஈனப்பிறவிகள்

    அல்லாவின் அளவற்ற அருளை அங்கே சில

    குல்லா போட்ட மனிதர்களே குண்டால் தகர்த்தனர்

    அல்லாவின் நிகரற்ற அன்பை அவமானச் செயலால்

    செல்லாமல் போகச் செய்தனர் சிறுமனம் படைத்தோர்

    மதங்கள் மனிதம் காக்கும் கேடயமா இல்லை

    மனிதஇனத்தை வேரறுக்க வந்த கோடரியா

    ReplyDelete