.

.

Monday, December 22, 2014

வள்ளலார் பெற்ற அனுபவம்


ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள்

அற்புதக் காட்சியடி அம்மா


அற்புதக் காட்சியடி


ஜோதி மலைஒன்று தோன்றிற்று அதில் ஒரு

வீதி உண்டாச்சுதடி அம்மா


வீதி உண்டாச்சுதடி


வீதியில் சென்றேன் அவ்வீதி நடுஒரு

மேடை இருந்ததடி அம்மா


மேடை இருந்ததடி


மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு

கூடம் இருந்ததடி அம்மா


கூடம் இருந்ததடி


கூடத்தை நாட அக் கூடமேல் ஏழ்நிலை

மாடம் இருந்ததடி அம்மா


மாடம் இருந்ததடி


இப்படி போய் இன்னும் 25 கண்ணிகளில் தனது இறையனுபவத்தைத் தந்து 

கடைசியில்

அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்

அமுதமும் உண்டேனடி அம்மா


அமுதமும் உண்டேனடி


தாங்கும் அவளருளாலே நடராஜர்

சந்நிதி கண்டேனடி அம்மா


சந்நிதி கண்டேனடி


சந்நிதியில் சென்று நான்பெற்ற பேறு

சாமி அறிவாரடி அம்மா


சாமி அறிவாரடி



என்று இவர்பெற்ற இந்த ஆன்மிக அனுபவத்தில் கொஞ்சம் கூட பெறாத சிலரின் கல்லறைகளைத் தேடி ஓடும் தமிழர் கூட்டம் கண்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை

- டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி
திருவெண்காடு

No comments:

Post a Comment