இது என் அம்மா தனஜோதி
மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்து மூன்று வயது எனக்கு முடிவதற்குள் விட்டுவிட்டுப் போய்விட்டார் ்
முதல்பெண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வீட்டுக்கு மருமகளாக ஆனதையோ தற்போது இரண்டாவது பெண்ணும் வசதியாக வாழ்வதையோ
தன் ஒரேமகன் டாக்டர் ஆனதையோ பார்க்க முடியாமல் போன இவரது படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரத் தவறாது ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்்்்்
என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை.
என் வலைப்பூவில் உங்கள் பற்றிய நினைவுகளை சுகமாய் சுமந்து கொண்டு என் எண்ணங்களை இந்த இணையம் வழியே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றேன்.... நல்லன எல்லாம் எழுத வேண்டும். நல்லன எல்லாம் பேச வேண்டும்... நல் வழியே நடக்க வேண்டும் என்னும் உங்கள் வார்தைகளை உபதேசமாகக்கொண்டு என் இணைய பகிர்தலை ஆரம்பிக்கின்றேன் அம்மா. ஆசீர்வாதம் வேண்டும்.
உங்கள் அன்னையின் நினைவில் நாங்களும் இங்கே வணக்கத்தை சமர்பிக்கிறோம்
ReplyDeleteவலைப்பூவிற்கு அன்புடன் வரவேற்கின்றேன். தங்கள் அன்னை மற்றும் தந்தையின் ஆசிகள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எப்பொழுதும் வாழ்வாங்கு வாழ வைக்கும்.
ReplyDeleteதங்களின் சோக வரிகள் என் கண்களில் நீர் துளிகளாகின்றது. ஆயினும் நீங்களே உங்கள் அம்மாவை பாவப்பட்ட ஜென்மம் என்று சொல்வதா? தவறாகத் தோன்றுகின்றது. ஒருவேளை உங்கள் குடும்பம் பரம ஏழையாக இருந்திருந்து, உங்கள் அம்மா சிறிய வயதில் இறையடி சேர்ந்திருந்தால் அதனை வரவேற்பீர்களா? அம்மாவை புன்னியவான் என்பீர்களா? பொருள் புகழ் இருந்தும் அதனை அனுபவிக்க முடியாமல் சென்றதை நினைத்து உங்கள் உள்ளம் கவலையடைவதை உணரமுடிகின்றது. மரணம் என்னும் இறைவனின் சோதனை நம்மை மிரளவைக்கின்றது, அதுவும் இளவயது மரணம் என்பது கொடூரம். இனியாவது நாம் வள்ளல் வழிநின்று மரணத்தை எதிர்த்து நடை பயில்வோம்.
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் - கடலூர்.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!
ReplyDeleteசிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க!
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க!
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜெனமும் பூமியில் புதியது இல்லை!
மரணத்தை போலொரு பழையது மில்லை!
இரண்டு மில்லாவிடில் இயற்கையு மில்லை!
இயற்கை ஆணைதான் ஞானத்தின் எல்லை!
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் உலாவிய கால்களும் எங்கே?
தேகம் புதையுண்ட இடங்களும் எங்கே?
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக!
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க!
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக!
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க!
பிறப்பு இல்லாம லொரு நாளொன்று மில்லை!
இறப்பு இல்லாம லொரு நாளொன்று மில்லை!
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை!
மறதியைப் போலொரு மாமருந் தில்லை!
கடல் தொடு மாறுகள் கலங்குவ தில்லை!
தரை தொடுந் தாரைகள் அழுவது மில்லை!
நதிமழை போன்றது விதிஎன்று கண்டும்
மதிகொண்ட மானிடர் மயங்குவ தென்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்!
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்!
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்!
விதை யொன்று வீழ்ந்திடில் செடிவந்து சேரும்!
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரைக் கொண்டோம்!
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்!
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் என்னுடன் வாழ்ந்திடக் கூடும்!
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் என்னுடன் சேர்க!