.

.

Monday, December 8, 2014

டிசம்பர் 6


 

பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு


பாபர் மசூதி இடித்த நாள்

மதநல்லிணக்கத்தை இடித்த நாள்


பிறப்பு இறப்பற்றது பரம்பொருளாம்


பிறப்பு இறப்புள்ளவன் மனிதனாம்


காலம் கடந்தவன் கடவுள்


காலத்திற்கு உட்பட்டவன் மனிதன்


அணு முதல் அண்டம் அவன் வீடு


காம்பவுண்டு சுவருக்குள் நம் வீடு


கட்டிய கோயில் சில காலம்

கட்டும் மனிதனும் சில காலம்


இப்பிறவியில் இந்து முஸ்லிம்

மறு பிறவியில் யார்யாரோ


சொர்க்கம் நரகத்தில் நீ யாரோ

என்றும் இருக்கும் ஒன்றிற்காக

எப்போதும் இருக்கும் அதற்காக


இங்கே நடக்கனுமா உயிர்பலிகள்


சிலநாள் உலாவும் தசையும் எலும்பும்

ரத்தமும் நரம்பும் என


மனதைத் தாங்கி நடக்கும் கூடுகள்


ஆதியந்தம் அற்ற இறைமைக்காக இடம்


அமைக்கப் போராட்டமா


பேரறிவாளனுக்கு பெருந்தயவாளனுக்கு

ஆசைகளால் செய்யப்பட்டவன்


ஆலயம் அமைத்தால் பூரணமாகுமா


மதங்கள் தள்ளி மனிதம் வளர்ப்போம்

கலைகள் போற்ற பழங்கால


கட்டடக்கலைக் காப்போம்


இறைமை போற்ற ஆன்மா போற்றுவோம்


உடைப்பதில் இல்லை ஆன்மீகம்

படைப்பதில் இருக்கிறது!

இடிப்பதில் இல்லை ஆன்மீகம்

பிறர் துன்பம் கண்டு துடிப்பதில் இருக்கிறது!

1 comment: