.

.

Wednesday, January 28, 2015

குடியரசு தினம்!



குடியரசானதாம் நமது தாய்த்திரு நாடு


குடிமக்கள் குடி ஒழித்து எழுவது எப்போது


போலி அரசியல்வாதிகளின் மாயைவிட்டு

வேலியே பயிர் மேயும் நிலைமாறுவது எப்போது


இலவசங்களுக்கு அலையவிடும் நிலை ஒழிந்து

பரவசத்தால் மக்களெல்லாம் மகிழ்வது எப்போது


மதவாதம் இனவாதம் சாதிவெறி கலைந்து

உதவுகின்ற உள்ளங்கள் மலர்வது எப்போது


ஊழல் கையூட்டு லஞ்சம் பித்தலாட்டத்தால்

தாழும் நமது தேசம் தலைநிமிர்வது எப்போது


வன்முறை குண்டுவெடிப்பு கள்ளத்தனம் போய்

நன்முறையில் நாடு நலம் காண்பதெப்போது


வறுமை பஞ்சம் பட்டினி பிணி ஏதுமின்றி

பெருமை பொங்க நமதுகொடி பறப்பதெப்போது


ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்போர்

வீட்டுக்கு வீடு தெளிவடைதல் எப்போது


கற்பழிப்பு திருட்டு கொலைகள் இன்றி

உற்பத்தியில் நாடு தன்னிறைவும்


கற்பதில் மக்கள் முனைப்புகாட்டி அதன்வழியில்

நிற்பதுவும் நடப்பதுவும் எப்போதோ


அப்போது பறக்கும் மூவண்ணக்கொடி

அது சுருக்கமில்லாத உண்மை சுதந்திரக்கொடி்்்

No comments:

Post a Comment