.

.

Friday, January 9, 2015

தமிழ்மணம் திரட்டியில் என் வலைப்பூவை சேர்த்தமைக்கு நன்றி!


அன்புடையீர்!

 என் பெயர் ஜெய.இராஜமூர்த்தி. ஊர்: திருவெண்காடு - நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அடுத்த திருவெண்காடு என்பது என் சொந்த ஊர். குழந்தைகள் நல மருத்துவராக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றேன்.

சமீபத்தில்  வலைப்பூ தொடங்கி அதில் நான் எழுதிய ஆன்மீக, சன்மார்க்க  புத்தகங்கள், கவிதைகள் போன்றவற்றை பதிந்து வருகின்றேன். நான் எழுதும் வலைப்பூ மற்றவர்கள் கவனிப்பின்றி இருந்து வருகின்றது. ஆனால் தமிழ்மணம் திரட்டி தற்போது என் பதிவுகளை திரட்டுவது குறித்து மிக்க மகிழ்வு. என் மனப்பூர்வ நன்றிகளை தமிழ்மணம் தமிழ் வலைத்திரட்டிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இனி என் வலைப்பூ பலரது பார்வைக்கு சென்றடையும் என நம்புகின்றேன்.

இதில் முன்பே இணைந்திருக்கும் தோழர்கள் என்னையும் உங்களுடன்  தோழனாக இணைத்துக் கொண்டு என் வலைப்பூ பக்கத்துக்கும் வந்து பார்த்து படித்து, உங்கள் கருத்துகளை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் தமிழ்மணம் திரட்டிக்கு என் அன்பான நன்றிகள்!



என்றும் அன்புடன்


 Dr.ஜெய.இராஜமூர்த்தி M.B.,B.S., D.C.H.,
திருவெண்காடு

4 comments:

  1. வருக! கடந்த ஆறு மாதங்களாக புதிய வலைபதிவுகள் எதையும் அனுமதிக்காமல் இருந்த தமிழ் மனம் தற்போது 230 க்கும் மேற்பட்ட வலைப் பூக்களை இணைத்துள்ளது. இவற்றை என பதிவில் பட்டியலிட்டுக் கட்டி இருந்தேன்.தமிழ்மணத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. very welcome, Tamil need service from scholar people like you, thanks

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். இனி தங்கள் பதிவுகள் உலகப் பிரசித்தம் ஆகும்.

    ReplyDelete