![]() |
****************
பல பேரிடம் இளவயது முதல் தமிழ்ப் படித்த உ வே சா வுக்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்க ஆவல் மேலிட்டது ் அவருடைய தந்தை உ வேசா வை அழைத்துக்கொண்டு பிள்ளையர்கள் வசித்த மாயூரம் வந்துள்ளார்கள் மகாதானத் தெருவில் தன் தம்பி இல்லத்தில் முதலில் இருவரும் போய்த் தங்கி பிள்ளை அவர்களை சந்திக்க முயன்றுள்ளனர்
அக்கால கட்டத்தில்தான் மாயூரத்தில் நந்தன் சரித்திரக் கீர்த்தனை எழுதிய கோபால கிருஷ்ண பாரதியும் முன்சீப் ஆகப் பணிபுரிந்த வேதநாயகம் பிள்ளையும் வாழ்ந்துள்ளனர் கோபால கிருஷ்ண பாரதியும் உ வே சா வின் தந்தை வேங்கட சுப்பையரும் முன்பே அறிமுகமானவர்கள் ஒருநாள் இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்ந்தபோது பாரதியார் என்ன விஷயமாக மாயூரம் வந்துள்ளீர் எனக் கேட்க தனது மகனின் தமிழ்ப்படிப்பிற்காக பிள்ளையிடம் சேர்க்க வந்த விஷயத்தைச் சொன்னாராம்
அப்போது பாரதி மகாவித்துவான் மிகப் பெரிய பண்டிதர்தான் ஆனால் அவருக்கு சங்கீதம் என்றாலேப் பிடிக்காது என்று சொல்லியுள்ளார் உ வே சா வுக்கு சங்கீதமும் தெரிந்துகொள்ள ஆசை ் தன் தந்யைின் மூலம் ஏற்கனவே ஓரளவு சங்கீத ஞானத்தை தெரிந்து கொண்டவர் பிறகு பிள்ளையவர்களுக்குத் தெரியாமலே பாரதியாரிடம் இசை பயின்றுள்ளார்
முதன் முதலில் தன்னைக் கூட்டிக் கொண்டு தன்தந்தை மகாவித்துவான் வீட்டிற்குப் போனதும் ஏற்பட்ட அனுபவத்தை சுவராஸ்யமாக எழுதியுள்ளார் உ வே சா உமது பெயரென்ன என பிள்ளைக் கேட்க வேங்கடசுப்பையர் என்றாராம் உ வே சா வின் தந்தை வேங்கட சுப்ரமணியன் என்ற பெயரின் மரூஉ இது ் இதிலிருந்து வேங்கடத்தில் இருப்பது சுப்ரமணியனே என்பது தெளிவு என்றாராம்
அப்போது ஒரு பண்டிதர் வடலூர் ராமலிங்கசாமிகள் பற்றியும் அவர் செய்யும் பணிகள் பற்றியும் சொல்ல அப்பகுதி மக்களின் தயை குணத்தைப்பற்றி வேங்கட சுப்பையர் சொல்ல மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னாராம்
காட்டுப் பிரதேசங்கள் என்று நாம் சொல்கிறோம் அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன நாகரிகம் அதிகமாக சுயநலமும் அதிகமாயுள்ளது நாகரிகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம் என்று ஆமாம் அந்தக் காலத்தில் வள்ளலார் வசித்த வடலூரும் மேட்டுக்குப்பமும் முன்னேறாத கிராமப் பகுதிகள் ்மேட்டுக்குப்பம் இப்போதும் காட்டுப் பிரதேசம் போன்றே காட்சியளிக்கிறது எனில் அன்று சொல்லவா வேண்டும்!
இப்படியாக அய்யா உ.வே சா அவர்களின் “என் சரிதம்” படிக்கும் போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது.
அப்படியே உ.வே.சாவின் நினைவு மஞ்சரியும் ஒரு புரட்டு புரட்டுங்க அண்ணா ! அதுல தலைவர் ஏகப்பட்ட அனுபவங்கள் மற்றும் தன்னுடைய பயணங்கள் பற்றி எழுதிருப்பார் . உ.வே.சா தமிழில் ஒரு சிறப்பான உரைநடை எழுத்தாளர் என்பது புலப்படும் . அவ்வளவு அழகான , அதேநேரம் அலுப்பைத்தராத எழுத்துநடை அவருடையது .
ReplyDelete